தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரோகிணி. மறுபடியும் மகளிர் மட்டும் பவுனு பவுனுதான் ஐயா என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். பிரபல வில்லன் நடிகர் ரகுவரனை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனுக்கு தாயான நிலையில் பிறகு ரகுவரனை விட்டு பிரிந்து விட்டார்.
இப்போதும் பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் ரோகிணி நடித்து வருகிறார். வேலைக்காரன் பாகுபலி என பல படங்களில் ரோகிணி நடித்திருக்கிறார். பல படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அம்மாவாக ரோகிணி நடித்து வருகிறார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் முக்கிய பொறுப்பில் இருந்து தொடர்ந்து கம்யூனிச சித்தாத்தங்களை மேடையில் பேசி வருகிறார்.
குறிப்பாக சமூக பொறுப்புணர்வு கருத்துகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். நடிகர் ரகுவரனை திருமணம் செய்துக்கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட போது ரோகிணிக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் நடிகர் ரகுவரன் ரோகிணியை நடிக்க வேண்டாம் என்று மறுத்ததால் ரகுவரனை விட்டு அவர் பிரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரோகிணி கூறியதாவது, வாழ்க்கைக்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதாக நான் கருதவில்லை. மற்ற உயிரினங்களை போலவே நாமும் இந்த பூமியில் வாழ்கிறோம். அதே வேளையில் நாம் சிந்திக்க தொடங்கி பல விதிகளை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கினோம்.
நிர்வாகத்துக்காக சில அமைப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால் இன்று சிலர் ஆட்சியாளர்களாகவும் மற்றவர்கள் அதிகாரம் மிக்கவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அதிகாரம் மக்களுக்கு நன்மை செய்ய என்று அல்லாமல் அடக்கி ஆள என்றாகி போன அவலம் தான் உலகெங்கும் நடக்கிறது.
நான் ஓர் இலை போல வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இயற்கையின் ஒரு பகுதி நான். அவ்வளவுதான். இந்த பூமியில் நமக்கு என்ன வேலை என்று கேட்டால் அடுத்த தலைமுறையை உருப்படியாக வளர்ப்பது தவிர வேறு எதுவும் இல்லை. அந்த உருப்படி என்பது என்னவென்றால் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் அதை உறுதி செய்வதுதான் நம் கடமை என்று நடிகை ரோகிணி கூறியிருக்கிறார்.





