- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறேன், பல நடிகர்களுடன் பணி செய்திருக்கிறேன், ஆனால் இவரை போல...

நான் பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறேன், பல நடிகர்களுடன் பணி செய்திருக்கிறேன், ஆனால் இவரை போல யாருமே இல்லை – நடிகை நயன்தாரா புகழாரம்!

- Advertisement -

பெங்களூரில் நேற்று கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் கியாரா அத்வானி நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று நடிகை நயன்தாரா பேசினார் அப்போது படத்தில் நடித்துள்ள கியாரா அத்வானி ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுடாரியா உள்ளிட்டோரை நடிகை நயன்தாரா பாராட்டி பேசினார்.

தொடர்ந்து நடிகை நயன்தாரா பேசியதாவது, நான் இதுபோல் உரைகள் அதிகம் நிகழ்த்துவதில்லை. அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். மன்னித்து விடுங்கள். நானும் இயக்குனர் கீதும் மிக நீண்ட அழகான ஒரு பயணத்தை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும். அதில் வேறு ஒரு கீது இருந்தார்.

- Advertisement -

அவர் என்னை இந்த டாக்ஸிக் படத்திற்காக அழைத்த போது பல நடிகர்கள் இருப்பதால் தயங்கினேன். அதிக நடிகர்கள் இருக்கும் படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் சற்று கவனமாக இருப்பேன். அவர் என்னிடம் 10 மில்லியன் கேள்விகள் கேட்டார். சரி நீங்கள் வந்த கதையை கூறுங்கள் என்று கேட்டேன். கதையை கேட்டவுடன் இந்த இயக்குனர் யார்? என ஆச்சரியப்பட்டேன்.

நீங்கள் நம்ம முடியாத ஒரு விஷயத்தை பார்க்க போகிறீர்கள். இந்த படம் உங்களை அசர வைத்து விடும். நான் முதன்முதலில் யஷ்சை சந்தித்தபோது பல விஷயங்கள் வியந்தேன். என்னை நம்புங்கள். அவரை சந்தித்தபோது அவரிடம் இருக்கும் அந்த பிரம்மாண்டமான பிம்பம் நேரிலும் அப்படியே இருந்தது. டிரெய்லரில் பார்ப்பது போலவே தான் அவர் உண்மையிலும் இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதையும் தாண்டி அவரது உழைப்பைப் பற்றி அனைவரும் பேசினார்கள். இவரை விட கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அவர் உழைக்கும் விதத்தை கண்டு வியந்து இருக்கிறேன். இந்த மனிதன் தனது வாழ்க்கையில் 4.5 ஆண்டுகளை இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறார். அவர் தனது வாழ்க்கையை குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குழந்தைகளுக்கான நேரத்தை தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனாக அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இயக்குனர் கீதுவை அவர் பார்த்துக்கொண்ட விதம் ஒரு நடிகர் தனது இயக்குனரை இப்படி பார்த்துக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் அளப்பரிய அன்பும் மரியாதையும் உள்ளது. ஒரு நடிகராக தயாரிப்பாளராக ஒரு மனிதராக ஒரு கணவராக குடும்பத் தலைவராக தந்தையாக யஷ்சை நான் மிகவும் மதிக்கிறேன் என்று நடிகை நயன்தாரா விழாவில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்