நடிகை நயன்தாரா மலையாள சினிமாவில் ஒரு படத்தில் மட்டுமே நடித்த நிலையில் தமிழில் ஐயா என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். சரத்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்த அவருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்ததால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அதிலும் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சரத்குமார் என நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் நடித்ததால் மிக விரைவில் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. மேலும் நாயகியை மையப்படுத்திய அறம் மாயா நெற்றிக்கண் போன்ற படங்களில் அவர் நடித்ததால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரும் கிடைத்தது.
இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா மாறினார். இந்த காலகட்டத்தில் அவர் நடிக்கும் எந்த ஒரு படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்கும் அவர் வராமல் தவிர்த்தார். நயன்தாராவின் கால்ஷீட் கிடைப்பதே பெரிய விஷயம் என்ற நிலையில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஹீரோக்கள் இதை கட்டாயப்படுத்தவும் முடியவில்லை.
அதே நேரத்தில் நயன்தாரா அவரது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் தர பட விழாக்களில் கலந்துக்கொள்வார். இதுவும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த டாக்ஸிக் பட விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்று பேசினார்.
அடுத்ததாக கவின் நயன்தாரா நடித்த ஹாய் படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. அந்த விழாவிலும் நடிகை நயன்தாரா கலந்துக்கொள்ள ஓகே சொல்லியிருக்கிறார். இனி அவரது படங்களின் பிரமோசன்களின் அவர் கலந்துக்கொள்ளும் முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என மற்ற மொழிகளை சார்ந்த இளம் நடிகைகளின் வருகை அதிகரித்து விட்டது. நயன்தாராவுக்கு வயதும் 40 கடந்து விட்டது. இனியும் பழைய கெத்து காட்டி முரண்டு பிடித்தால் படங்களில் வாய்ப்பே இருக்காது. கோடிக்கணக்கில் வருமானமும் பார்க்க முடியாது என்பதால் தனது பிடிவாதத்தை எல்லாம் நயன்தாரா மூட்டை கட்டி வீசி விட்டார். பிரமோசனுக்கு அழைக்காமலேயே கூட அவரே வருவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





