தமிழ் சினிமாத் துறையில் நீண்டகால அனுபவமும் முன்னணி நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமான நட்பிலும் இருந்து வருபவர் நடிகர் சித்ரா லட்சுமணன். தாவணிக்கனவுகள் ஜப்பானில் கல்யாணராமன் பாஸ் என்கிற பாஸ்கரன் அரண்மனை என பல படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
மேலும் சினிமா தயாரிப்பாளராகவும் வினியோகஸ்தராகவும் இயக்குனராகவும் உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்த அவர் தனது திரையுலக அனுபவங்களை, படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவங்களை வீடியோக்களில் பேசி வருகிறார். பல நடிகர் நடிகைகளை அவர் நேர்காணல் செய்தும் வருகிறார்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, நடிகர் நாகேஷ்க்கும் நடிகர் ரஜினிக்கும் இடையே ஆழ்ந்த நட்பு இருந்தது. அப்போது மதிய வேளைகளில் நாகேஷ் அருகில் ஏதாவது படப்பிடிப்பில் இருந்தால் தன்னுடன் சாப்பிட அவரை அழைப்பது ரஜினியின் வழக்கமாகவும் இருந்தது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படத்தில் நடிக்க நாகேஷிடம் 10, 15 நாட்கள் கால்ஷீட் வாங்கப்பட்டது. ஆனால் அந்த படத்தில் நாகேஷை என்ன காரணத்தாலே மணிரத்னம் முழுமையாக பயன்படுத்தவில்லை. அவரை வைத்து நிறைய காட்சிகள் எடுக்கவில்லை. அவர் படத்தில் 3 காட்சிகளில் மட்டுமே வருவார்.
இதுகுறித்து ஒருமுறை நடிகர் ரஜினியிடம் பேசும்போது லேசாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நாகேஷ். ஆனால் அதற்கு ரஜினி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டார். இது நாகேஷூக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஒன்று எனக்கு ஆதரவாக பேசலாம், அல்லது டைரக்டருக்கு ஆதரவாக பேசலாம். ஆனால் ரஜினி ஒன்றுமே இதற்கு ஒன்றுமே சொல்லவில்லையே என்று நாகேஷ் நினைத்திருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு முறை நாகேஷ் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். ரஜினி ஏன் அப்போது அப்படி நடந்துக்கொண்டார் என்பதை பின்னாளில் நான் புரிந்துக்கொண்டேன். நாம் யாரை பற்றி விமர்சிக்கிறோமா அவர் பக்கத்தில் இல்லாத போது அவரை பற்றி பேசுவது தவறு என்ற குணம் கொண்டவர் ரஜினிகாந்த். அந்த பண்பு காரணமாக தான் மணிரத்னம் குறித்து நான் பேசிய போது ரஜினி பதில் எதுவுமே சொல்லலே என்று நாகேஷ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எனறு சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.





