- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் அந்த நடிகருக்கு சொன்ன கதையில்தான் கார்த்தி நடிக்கிறாரா? இதென்னப்பா கதை ஒண்ணா இருக்கு,...

மாரி செல்வராஜ் அந்த நடிகருக்கு சொன்ன கதையில்தான் கார்த்தி நடிக்கிறாரா? இதென்னப்பா கதை ஒண்ணா இருக்கு, ஹீரோ மட்டும் மாறிகிட்டடே இருக்காங்க?

- Advertisement -

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். கதிர், ஆனந்தி, மாரிமுத்து, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த படத்தில் அதிகார ஆணவப்போக்கு மிக்க வில்லன் கேரக்டரில் போலீஸ் எஸ் பி அதிகாரியாக நட்டி நடித்திருந்தார் இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த படத்தின் நாயகன் உதயநிதி என்றாலும், படத்தின் உண்மையான ஹீரோ வடிவேலுதான். அதுவரை காமெடி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்திருந்த வடிவேலு, இந்த படத்தில் குணச்சித்திர நடிகராக வேற லெவலில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கிய படம் வாழை. வறுமையின் கொடுமையை சொன்ன இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற படத்தை மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ்நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக இருந்தது.

- Advertisement -

ஏற்கனவே இந்த படத்தின் கதையை நடிகர் தனுஷிடம், மாரி செல்வராஜ் கூறிய நிலையில், அடுத்தடுத்த கமிட்மென்ட் காரணமாக தனுஷால் இப்போது மாரி செல்வராஜ் படத்துக்கு கால்ஷீட் தர முடியவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ் இன்னும் ஓரிராண்டுகள் காத்திருக்குமாறு கூறியிருக்கிறார். அதனால் தனுஷ் படத்தை பெண்டிங்கில் வைத்த மாரிசெல்வராஜ், கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் அந்தப் படத்தில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதால், அதே படத்தில் இப்போது நடிகர் கார்த்தி நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. நடிகர் தனுஷூக்கு சொன்ன கதையில்தான் நடிகர் கார்த்தி நடிக்கிறார். ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையில்தான் சூர்யா 44 படம் உருவானது.ஆர் கே பாலாஜி விஜய்க்கு சொன்ன கதையில்தான் சூர்யா 45 படம் உருவாகிறது. இப்போது தனுஷூக்கு சொன்ன கதையில் கார்த்தி நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இப்படி கதை ஒன்றாக இருந்தாலும், ஹீரோக்கள் மாறுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்