இயக்குனர் வெங்கட்பிரபு இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில் உன்னை சரணடைந்தேன் சிவகாசி போன்ற சில படங்களில் வெங்கட்பிரபு நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
இதையடுத்து 2005ம் ஆண்டில் அவர் இயக்குனராக களத்தில் இறங்கி சென்னை 28 படத்தை தந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கோவா சரோஜா மாநாடு சென்னை 28 படத்தின் 2ம் பாகம் மங்காத்தா மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களை தந்தார்.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் வெங்கட்பிரபு கடைசியாக இயக்கிய படம் விஜய் நடித்த தி கோட். அந்த படம் 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. அந்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் பூர்த்தி அடையும் சூழலில் இன்னும் அடுத்த படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 12 படங்களை மட்டுமே டைரக்ட் செய்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயனை நம்பி கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் அவர் 2027ம் ஆண்டு இறுதி வரை வெங்கட்பிரபுவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டார். அஜீத்குமாரும் வாய்ப்பில்ல ராஜா என்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை வெங்கட்பிரபு இயக்க திட்டமிட்டார். அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் என்பதால் அவருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் அதுவும் சாத்தியமின்றி போய்விட்டது. எனினும் 2 ஆண்டுகளாக காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த வெங்கட்பிரபு இப்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.
அவர் ஏற்கனவே டைரக்ட் செய்த கோவா படத்தின் பாணியில் ஜாலியான ஒரு படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தப்படுகிறது. இதில் வைபவ் மிர்சி சிவா ஜெய் போன்ற அவரது நண்பர்கள் குழு இந்த படத்தில் நடிக்க உள்ளது. இதற்கான வேலைகளில் வெங்கட்பிரபு தற்போது தீவிரமாக இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





