- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த சீரியல் பார்க்க உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த படத்துக்கு போங்க - விஸ்வநாத் அண்ட்...

இந்த சீரியல் பார்க்க உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த படத்துக்கு போங்க – விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிகை மமீதா பைஜூ ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். வாத்தி லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வந்துள்ளது.

இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, படத்தின் கதாநாயகன் மிகப்பெரிய தொழில் அதிபர். மிகப்பெரிய பணக்காரன். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருபவர். அவருக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருமணம் ஆகவில்லை என்று அவரது அம்மாவுக்கு கவலையாக இருக்கும்.

இதற்கிடையில் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது கைக்குழந்தையுடன் வருகிறார். அது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அந்த குழந்தையை அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலம் பெற்று எடுத்திருப்பார். குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வந்து தன்னுடன் வளர்க்க விரும்புவார். அப்படி நினைக்கும் போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதை சரி செய்ய குழந்தையின் அம்மா வர வேண்டும் என்று கூறுவார்கள்.

இப்படி இருக்கும் போது சூர்யா அமெரிக்காவுக்கு சென்று அந்த வாடகை தாய் யார் என்று தேடுவார். அப்போதுதான் அவர் தன்னைவிட 20 வயது குறைந்த மமீதா பைஜூ என்பது தெரியவரும். அவரிடம் சென்று விஷயத்தை சொல்லி இந்தியாவுக்கு வர சொல்லுவார். அப்போதும் மமீதாவும் ஒரு பெரிய தொகையை கொடுத்தால் தான் வருவேன் என்று கூறுவார். மமீதா இந்தியாவுக்கு வந்த பின்பு என்னென்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இது ஒரு மினிமம் கேரண்டியான கதை.

இந்த கதைக்கு ஒரு சுமாரான திரைக்கதை செய்து விட்டால் போதும். படத்தைக் தேத்தி விடலாம். படத்தில் பல காட்சிகள் ரொம்பவும் நல்லா விதமாக இருந்தன. ஆனால் அவையெல்லாம் படத்திற்கு கொஞ்சமும் தாக்கத்தை ஏற்படுத்தாத காட்சிகள். படத்தின் தொடக்கத்தில் சூர்யா ஒரு துப்பாக்கி சுடும் வீரராக காட்டுவார்கள். ஆனால் அந்த காட்சிக்கும் இந்த படத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. இந்த படம் ஒரு துப்பாக்கி சூடும் வீரனின் கதை இல்லை. இதுபோல பல காட்சிகளை சொல்லலாம்.

ஆனால் நல்ல காட்சிகள் என்று படத்தில் வைத்து விட்டார்கள். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பதை ஏதோ வீட்டில் கார் ரிப்பேர் என்பது போல பேசிக் கொண்டிருப்பார்கள். பல காட்சிகள் யதார்த்தத்தை விட்டு விலகி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு இந்தி சீரியல் போல படம் உள்ளது. இந்தி சீரியல் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என்று ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார்.

சற்று முன்