- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் விஷாலும் கெஞ்சியும் கூட பலமுறை கேட்டுட்டோம், ஆனா இதுவரைக்கும் அது நடக்கலே - ...

நானும் விஷாலும் கெஞ்சியும் கூட பலமுறை கேட்டுட்டோம், ஆனா இதுவரைக்கும் அது நடக்கலே – நொந்து போன டைரக்டர் சுந்தர் சி ஓப்பன் ஸ்டேட்மென்ட்

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி, உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இயக்குனர் மணிவண்ணனிடம் பல படங்களில் இயக்குனராக பணிபுரிந்த சுந்தர் சி காதல் மற்றும் காமெடி ஆகிய 2 விஷயங்களை மையப்படுத்தி எடுத்த படங்கள் அனைத்துமே மாஸ் வெற்றிப் படங்களாக அமைந்தன.

ரஜினிகாந்த் நடித்த அருணாசலம், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் போன்ற வித்யாசமான கதைக்கள படங்களையும் இயக்கி, அதில் வெற்றி முத்திரை பதித்தவர் சுந்தர் சி. அன்பே சிவம் படம் வெளியான போது ரசிகர்கள் அலட்சியப்படுத்திய நிலையில், சமீப காலமாக அந்த படம் கொண்டாடப்படுகிறது. இப்படி ஒரு அழுத்தமான படத்தை தந்தது சுந்தர் சி தானா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சுந்தர் சி படங்களில் காமெடி, காதல் மட்டுமே அதிகமாக இருக்கும். முறைமாமன், மேட்டுக்குடி, நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுந்தர் சி. திகில் படங்களை தந்த வகையில் அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 படங்களை தந்தார். இப்போது அரண்மனை 4 படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

அரண்மனை 4 படத்தில் முதலில் நாயகனாக கமிட் ஆனது விஜய் சேதுபதிதான். அதன்பிறகு சந்தானமும் அதில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த நிலையில், இருவருமே கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பிறகு இந்த படத்தில் நானே ஹீரோவாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என, சுந்தர் சி சமீபத்தில் நடந்த அரண்மனை 4 பிரமோ நிகழ்ச்சியில் கூறினார்.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கிய படம் மதகஜராஜா. விஷால் நாயகனாகவும், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 11 ஆண்டுகளாக இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள், சுந்தர் சியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய சுந்தர் சி, மதகஜ ராஜா இப்போது வெளியானாலும் மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும்.

அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திடம் நானும் விஷாலும் பலமுறை கேட்டு பார்த்துவிட்டோம். கெஞ்சியும் கூட பலமுறை கேட்டுவிட்டோம். நாங்களே பணம் கொடுத்து பணத்தை வெளியிடுகிறோம் என்றும் கூறிவிட்டோம். ஆனால் அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஒரு படத்தால் ஏற்பட்ட இழப்பு காரணமாக இந்த படத்தை இன்னும் ரிலீஸ் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் அந்த படம் வெளியானால் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி.

- Advertisement -

சற்று முன்