தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் வையாபுரி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய காமெடி நடிகர் வையாபுரி கூறியதாவது, நானும் அஜீத்குமார் சாரும் ஒரு நாளைக்கு 25 டீ குடிப்போம். அட்டகாசம் ஆஞ்சநேயா பூவெல்லாம் உன் வாசம் ராஜா அஜீத் கூட நிறைய படம் பண்ணியிருக்கேன். நிறைய பேர் கூட நடிச்சிருக்கோம். ஆனா யாரையும் தவறா சொல்லலே.
ஒரு நடிகர் நம்மை விட பெரிய ஆள் ஒருவர் கூட பேசிட்டு இருந்தால் நம்மை பார்த்தாலும் பார்க்காத மாதிரி அவங்க கூட பேசிட்டு இருப்பாங்க. இல்லே பார்த்தால் அவங்களை விட்டுட்டு வரணுமேன்னு யோசிப்பாங்க. ஆனா அஜீத் அப்படி கிடையாது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி. அவங்க கூட பேசிட்டு இருப்பார்.
இப்படி நான் கிராஸ் பண்ணி போகும்போது பார்த்துட்டேன்னா அவங்ககிட்ட சார் ஒரு நிமிஷம் என்று சொல்லிட்டு வந்து என்ன எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க? என்று கேட்டு என்னை கட்டிப் பிடிச்சு நலம் விசாரிச்சுட்டு ஒரு நிமிஷம் இருங்க, வந்துடறேன் என்று சொல்லிட்டு அவங்க கிட்ட போய் பேசுவார். அப்புறம் வருவார். இதெல்லாம் எப்பேர்ப்பட்ட ஒரு தன்மை.
அஜீத் சார் படம் ஷூட்டிங் பக்கத்துல நடக்குதுன்னு சொன்னாங்க. சரின்னு என் பொண்ணை கூட்டீட்டு அங்கே போனேன். இங்கிலீஸ்லயே என் பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்தார். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க. என்ன படிக்கிறீங்க என்று கேட்டுக்கிட்டு இருந்தார்.
அப்போ இன்டன்ஷிப் நீங்க போறதா இருந்தால் என் பிரண்டு ஒருத்தர் ஆர்க்கிடெக் கம்பெனி வெச்சிருக்கார். எனக்கு நீங்க போன் பண்ணுங்க. நான் உங்களுக்கு ரெஃப்பர் பண்றேன். நான் அவருக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னார். இப்படி யார் சொல்லுவாங்க? அப்போ மறக்க முடியாத ஒரு வார்த்தை சொன்னார்.
நானும் அப்பாவும் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியுமா சினிமா? அதெல்லாம் மறக்க முடியாது. இல்லே ஜி என்றார். இதை என்னாலும் மறக்க முடியாது என்று அந்த நேர்காணலில் பேசிய நடிகர் வையாபுரி கூறியிருக்கிறார். கடந்த 1990களில் ஏராளமான தமிழ் படங்களில் குறிப்பாக நடிகர்கள் விஜய் அஜீத்குமார் நடித்த பல படங்களில் காமெடியாக நடித்தவர் வையாபுரி என்பது குறிப்பிடத்தக்கது.





