சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் பேசியதாவது, நல்ல படங்களை மட்டும்தான் ஜனங்க ஏத்துக்குவாங்க. தப்பான படங்களை மக்கள் ஏத்துக்க மாட்டாங்க என்பது உண்மை தான். இங்க பேசினவங்க அப்படி சொல்வதும் சரிதான்.
ஏன்னா நானே இதுல மாட்டீட்டு முழிச்சிருக்கேன். சின்னவீடுன்னு ஒரு படம் எடுத்தேன். அந்த படம் ஏன் எடுத்தேன்னா என்னுடைய நண்பர்கள் ரெண்டு பேர் எப்பவும் அவங்க வொய்ப் பத்தி பேசிட்டு இருப்பாங்க. அவங்க ஒய்ப் ரெண்டு பேருமே கொஞ்சம் தடினமா குண்டா இருப்பாங்க.
நான் வெளியூர் போகும் போது மும்பை மாதிரி போகும் போது என் மனைவி பூர்ணிமாவுக்கு டிரஸ் அப்புறம் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்குவேன். அவங்க சினிமா நடிகை என்பதால் உடம்பை கரெக்டா வெச்சிருந்தாங்க. அதுக்கு என் நண்பர்கள், நீ பாரு உன் மனைவிக்கு ஸ்கர்ட் அது இதுன்னு எது எது எல்லாமே எடுக்கறே?
ஆனா எங்க மனைவிகளுக்கு எங்களால் எதாவது வாங்க முடியுதா? ஒவ்வொண்ணும் அப்படி ஒரு சைஸ்ல இருக்காங்கன்னு பேசினாங்க. எப்பவும் இப்படியே அவங்க புலம்பீட்டு இருப்பாங்க. நீங்களே இப்படி நினைச்சா எப்படீடா அப்படீன்னு நானும் அவங்களுக்கு அப்பப்போ அட்வைஸ் பண்ணுவேன்.
எல்லோருக்குமே ரதி மாதிரி பொண்டாட்டி மன்மதன் மாதிரி புருஷன் வேணும்ன்னா கிடைக்குமா என்று பேசிட்டு இருந்தேன். அதை அடிப்படையா வெச்சுதான் சின்னவீடு அப்படீங்கற படம் எடுத்தேன். ஒய்ப் குண்டா இருக்கிறதால ஹீரோ அப்படி இப்படி போறான்னு படம் எடுத்திருந்தேன். அதை பார்த்துட்டு என் பாட்டி என்னடா படம் எடுத்திருக்கேன்னு என்னை கேட்டாங்க. ஏண்டா பொண்டாட்டி கொஞ்சம் குண்டா இருந்தா இப்படி போய் ஊர் மேய்வாங்களா? என்றார்.
இல்லே, அதுல நியாயத்தை சொல்லியிருக்கேன் என்றேன். என்னடா நியாயம் சொல்லிட்டே நீ? எனக்கு பிடிக்கலே. இனிமே படம் எடுக்கும் போது என்கிட்ட முதலில் கதையை சொல்லிட்டு அப்புறமா படம் எடுன்னு சொல்லிட்டாங்க. அதுல ரைட்டரா டைரக்டரா நான் என்ன சொல்ல வந்தேனோ அது பாட்டிக்கு ஏறலே. ஸ்கிரீன்ல மனைவியை விட்டுட்டு சின்னவீட்டுக்கு போன பாக்யராஜ் தான் அவங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு என்று கே பாக்யராஜ் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





