- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா எப்போது? அந்த 2 காரணங்கள் முட்டுக்கட்டையாக இருக்குதே… தவெக...

ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா எப்போது? அந்த 2 காரணங்கள் முட்டுக்கட்டையாக இருக்குதே… தவெக அரசின் அனுமதி கிடைக்குமா?

- Advertisement -

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவான படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஏற்கனவே 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் பெரிய ஹிட் ஆன நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அவரது படத்தில் 2ம் பாகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. வருகிற அக்டோபர் 16ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது இந்த படம் தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. வருகிற நவம்பர் 8ம் தேதி ஜெயிலர் 2 படத்தை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று நடைபெற உள்ளது. வழக்கம் போல நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இந்த விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள பஞ்சாயத்து ஊரறிந்த விஷயம்தான்.

அதனால் ஜெயிலர் 2 படத்தின் விழாவை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கிடைக்குமா, என்பதில் குழப்பமும் சந்தேகமும் நீடிக்கிறது. மேலும் இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம். பின்னணியில் திமுக இருப்பதால் அதுவும் ஒரு தடையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

விஜய் நடித்த லியோ பட இசை வெளியீட்டு விழாவுக்கு அன்றைய திமுக அரசு அனுமதி தராமல் பல கெடுபிடிகளை விதித்தது. அந்த விழாவே கடைசியில் ரத்து செய்யப்பட்டது. அதனால் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவையே மலேசியாவில் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இப்போது விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியில் உள்ளது. ரஜினி படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என இருந்தாலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்தால் அது சர்ச்சையாக வெடித்து விடும். ஏற்கனவே விஜய் மீது ரஜினி ரசிகர்கள் பயங்கர அதிருப்தியில் உள்ளதால் பெரிய அளவில் தவெக அரசு நெருக்கடி தராது என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்