தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 3 மாதங்கள் கடந்து விட்டது. 100 நாட்கள் சிறப்பு போஸ்டர் கூட வெளியிடப்பட்டு விட்டது. ஆனாலும் ஜனநாயகன் தமிழக மக்கள் மத்தியில் சர்ச்சை நாயகனாகவே நீடித்து வருகிறார். சொன்னது ஒன்று செய்வது ஒன்று என்றுதான் விஜய் தலைமையிலான தவெக அரசு தாறுமாறாக போய்க்கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து தவெக அரசு கடும் விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. குறிப்பாக சட்டசபையில் எந்த துறை அமைச்சரும் அவர் சார்ந்த துறைக்கு பதில் சொல்லாமல் மற்ற துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். முதல்வர் விஜய் அவர் துறைகள் சார்ந்த எந்த கேள்விக்கும் பதில் தராமல் வேடிக்கை பார்க்கிறார்.
எந்த துறை குறித்தும் குறைகளை புகார்களை சொன்னால் உடனே உங்க ஆட்சியில் எல்லாம் சரியாக நடந்ததா? என்று எதிர்கேள்வி கேட்பதே தவெக அமைச்சர்களின் வழக்கமாக உள்ளது. இது அபத்தமாக உள்ளது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி திருப்பி கேட்பது அவர்களும் அதே தவறை அனுமதிப்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஏற்கனவே மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 4000 பெண்களுக்கு மாநிலம் முழுவதும் முற்றிலும் இலவச பயணம் போன்ற திட்டங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை.
திமுக அதிமுக ஆட்சி காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அப்படியே பெயரை மாற்றி இருப்பதுதான் 100 நாட்களில் தவெக செய்த ஒரே சாதனை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கிடையே சுதந்திர தின விழாவின் போது நடிகை திரிஷா அவரது அம்மாவுடன் முதல் வரிசையில் வந்து அமர்ந்தது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு தரப்பில் கார் வழங்கவும் அதை பராமரிக்கவும் பெட்ரோல் செலவுக்கும் மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் எனவும் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவர் மக்களை காக்க வந்தாரா, எம்எல்ஏக்களை காக்க வந்தாரா? இவரது கட்சி எம்எல்ஏக்களுக்கு சொந்த பணத்தில் கட்சி பணத்தில் கார் வாங்கி தரலாமே என்று விமர்சித்து வருகின்றனர்.





