தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் இருந்த ஹீரோக்களின் படங்களின் எண்ணிக்கை இன்னும் 50 கூட தாண்டவில்லை. ஏனென்றால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் நடிக்கும் பார்மூலா தான் பல நடிகர்களிடம் இருக்கிறது. 30 முதல் 40 வயதுக்குட்பட்ட நடிகர்கள் ஆண்டுக்கு 3 படங்கள் கூட நடிக்க முடியும். ஆனால் அதை அவர்கள் கவனமாக தவிர்த்து விடுகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, இன்றைய இளம் நடிகர்கள் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஆகியோரை எடுத்துக்குங்க. விஜய் அஜீத்குமார் போன்றவர்களும் இதே மாதிரி தான் பண்றாங்க. கொஞ்சம் பெரிய நடிகராக வந்த பிறகு ஒரு வருஷம் ஒன்றரை வருஷம்ன்னு ஒரு படம் பண்றாங்க.
ஐயா ரஜினி கமல் எல்லாம் 30 35 வயசுல எத்தனை படம் பண்ணினாங்க என்று அவங்களை பாருங்க. ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்துல அவங்க ஹீரோவாக வளர்ந்த அந்த நேரத்துல வருஷத்துக்கு நாலைஞ்சு படம் நடிச்சாங்க. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவங்க நடிச்சிட்டே இருந்தாங்க.
அப்போ சினிமா ஆரோக்கியமா இருந்தது. ரொம்ப வேகமாகவும் வளர்ந்தது. இன்னிக்கு மாதிரி அன்னிக்கு வசதிகள் கிடையாது. தொழில்நுட்பம் கிடையாது. ஒரு செட் போடணும் என்றால் 40 நாள் 50 நாள் ஆகும். மனிதர்கள்தான் வேலை செய்யணும். ஆனால் இன்று கம்ப்யூட்டரில் டிசைன் செய்து சீக்கிரமாக செட் போட்டுவிடலாம். தொழில்நுட்பம் நிறைய வளர்ந்து விட்டது.
அதனால் நீங்க நினைச்சா இப்போ நிறைய படம் நடிக்கலாம். ஆனால் டிமாண்ட் இருந்தால் தான் அதிக சம்பளம் வாங்க முடியும்ன்னு நினைக்கறீங்க. சம்பளத்தை அதிகப்படுத்தலாம்ன்னு நினைக்கறீங்க. உங்க சம்பளத்தை அதிகப்படுத்த என்ன வழியோ அதை தான் பார்க்கறீங்க. தமிழ் சினிமா துறை எப்படி ஆரோக்கியமா இருக்கணும் என்று நினைப்பதே இல்லை.
ரஜினி கமலுக்கு அப்புறமா வந்த விஜய் அஜீத் மட்டுமல்ல, அதுக்கு அப்புறமா வந்த சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் என்று எல்லா ஹீரோக்களுடைய மெண்டாலிட்டியும் அப்படிதான் இருக்கிறது. அதிக படங்களில் நடித்து சினிமா துறைக்கு உதவும் எண்ணமே அவர்களுக்கு சிறிதும் இல்லை என்று அந்த நேர்காணலில் திருப்பூர் சுப்ரமணியம் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





