- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 1200 கோடி செலவில் 20 லட்சம் செலவில் புதிய தலைமை செயலகம் - ஏன்...

ரூ. 1200 கோடி செலவில் 20 லட்சம் செலவில் புதிய தலைமை செயலகம் – ஏன் இப்போ இருக்கறது மழை வந்தா ஒழுகுதா? முதல்வர் விஜய் அறிவிப்பால் அதிர்ந்து போன தமிழக மக்கள்!

- Advertisement -

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்து தவெக கட்சிக்கு விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் நாம் அழுத்தியது விசிலுக்கா அல்லது நமக்கு நாமே வைத்துக்கொண்ட ஆப்பா என்று 100 நாட்களாக தவெக ஆட்சியை பார்த்து புலம்பத் துவங்கி விட்டனர்.

மக்களுக்கான நல்ல வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பார், அதிமுக திமுக செய்த அநாவசியமான தண்ட செலவுகளை, வீணடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் திட்டங்களை போல இல்லாமல் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவார் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் கடந்த 100 நாட்களில் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து வரும் அறிவிப்புகளும் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை தொடர்ந்து அப்செட் செய்து வருகின்றன. மக்கள் பணத்தை தொட மாட்டோம் தொடவும் விடமாட்டோம் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்று ஆவேசமாக டயலாக் பேசிய விஜய், தொடர்ந்து ஏமாற்றம் தந்தார்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் இலவச கார், பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் என்று அறிவித்த போதே மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர், அதுவும் 2.5 லட்சம் ரூபாய் ஆண்டு குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று அறிவிப்பு கடுப்பை கிளப்பினார்.

- Advertisement -

இன்று 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் ( 2006 -11) சென்னை ஓமந்தூரார் அரசின் தோட்டத்தில் ரூ. 450 கோடிசெலவில் கட்டப்பட்ட தலைமை செயலகம், 2010ல் திறக்கப்பட்டது. பிறகு ஜெ ஆட்சிக் காலத்தில் அது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்பிறகு வழக்கம் போல் புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இப்போது விஜய் தவெக ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாக ரூ. 1200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக அறிவித்துள்ளார். இந்திய பார்லிமென்ட் புதிய கட்டிடம் கட்டவே ரூ. 971 கோடிதான் செலவிடப்பட்டது. இப்ப இருக்கிற கோட்டையில் மழை வந்தால் ஒழுகுதா மிஸ்டர் சிஎம் சார் என்று மக்கள் கொதிப்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்