- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டர் ரஜினிக்கு செட் ஆகாது என்று நான் சொன்னேன், என்னை நடிக்குமாறு லதா ரஜினிகாந்த்...

அந்த கேரக்டர் ரஜினிக்கு செட் ஆகாது என்று நான் சொன்னேன், என்னை நடிக்குமாறு லதா ரஜினிகாந்த் பிடிவாதமாக கூறி விட்டார் – இயக்குனர் கே பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்ஸ்!

- Advertisement -

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அம்பிகா கே பாக்யராஜ் செந்தில் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நான் சிவப்பு மனிதன். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியர் ரஜினிகாந்த், இரவில் துப்பாக்கியால் ரவுடிகளை சுட்டுக்கொல்லும் ராபின் ஹூட் கேரக்டரில் நடித்திருந்தார். இதில் சிஐடி போலீஸ் அதிகாரியாக சின்ன சேலம் சிங்காரம் கேரக்டரில் கே பாக்யராஜ் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது.

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் நான் சிவப்பு மனிதன் படம் குறித்து கூறியதாவது, அந்த படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் ஒரு இந்தி படத்தை போட்டுக்காட்டி அந்த கேரக்டரில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறினார். அதில் ஹீரோ ரௌடிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போல இருக்கும். அது ரஜினிக்கு செட் ஆகாது என்று கூறினேன்.

- Advertisement -

ஏனென்றால் வில்லன் ஆட்கள் ரவுடிகள் கட்டைகள் கத்தி துப்பாக்கி என ஆயுதங்களுடன் வந்து அவர்களை ரஜினி அடித்து விரட்டினால் தான் நன்றாக இருக்கும். நானே அப்படி இருந்தால் தான் ரசிப்பேன். இதில் ரஜினி துப்பாக்கி எடுத்து வந்து டொப்பு டொப்பு டொப்பு என சுட்டு விட்டு சென்றால் ரசிக்க நன்றாக இருக்காது என்று சொன்னேன்.

ஆனால் 2 மாதங்களே படப்பிடிப்புக்கு உள்ளது. இதை விட்டால் இனி 5 ஆண்டுகளுக்கு ரஜினி கால்ஷீட் இருக்காது. வேறு வழியே இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். பிறகு அதே படத்தில் ஒரு போலீஸ் சிஐடி கேரக்டர் நீங்கள் பண்ணினால் நன்றாக இருக்கும் என்றார்.

- Advertisement -

ரஜினி கேரக்டரே எனக்கு சுமாராக தெரிகிறது. இதில் நான் நடித்தால் ரஜினியை முந்தியது போல் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மறுத்து விட்டேன். ஆனால் அந்த கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டும் என்று ரஜினியை விட லதா ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்து விட்டார். ஏனென்றால் அவர் இயக்குனர் கதாசிரியர்.

அவரது கேரக்டர் சற்று மிகையாக சில விஷயங்கள் தெரிந்தாலும் அவர் ரைட்டர் டைரக்டர் அவராக எதாவது செய்திருப்பார் என்று ரசிகர்கள் நினைப்பார்களே தவிர ரஜினிக்கு போட்டியாக நினைக்க மாட்டார்கள் என்று லதா ரஜினி கூறியிருக்கிறார். அதையும் ரஜினியே கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் அந்த படத்தில் நான் அந்த கேரக்டரில் நான் நடித்தேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்