- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடித்த படங்களை அப்படி சொல்லாதீங்க - பான் இந்தியா படங்கள் குறித்து வித்யாசமான விளக்கம்...

நான் நடித்த படங்களை அப்படி சொல்லாதீங்க – பான் இந்தியா படங்கள் குறித்து வித்யாசமான விளக்கம் தந்த நடிகர் நானி!

- Advertisement -

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் – அனுஷ்கா நடித்த பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படங்கள் வெளியான பிறகுதான் பான் இந்தியா என்ற ஒரு அடையாளம் சினிமாவில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தான் பான் இந்தியா படங்கள் என்ற அடையாளமே திரைப்படங்களுக்கு வந்தது.

அதன்பின்பு பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் சில படங்கள் அவர்கள் படமாக்கும் மொழிகளில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக அடையாளப்படுத்தப்பட்டு பல மொழிகளில் வெளியானது. அவற்றில் சில படங்கள் மட்டும் தான் நல்ல வசூலை குவித்தன.

- Advertisement -

பெரும்பாலான படங்கள் சுமாரான வெற்றியடைந்தன. இன்னும் பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் என்ற படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

தி பாரடைஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பான் இந்தியா என்று அடையாளம் இல்லாமல் இப்போது படங்கள் வெளியாவது இல்லையே என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த படத்தின் நாயகன் நடிகர் நானி கூறியதாவது, என் படத்தை பான் இந்தியா படம் என்று சொல்ல வேண்டாம். எந்த படத்தையும் அப்படி அழைப்பதையும் நான் விரும்பவில்லை.

- Advertisement -

இந்தி படங்கள் வரும்போது தென்னிந்தியாவில் அந்த படங்களை இந்தி படங்கள் என்றுதான் சொல்கிறார்கள். பான் இந்தியா படம் என்று சொல்வதில்லை. பதான் ஜவான் படங்கள் தென்னிந்தியாவில் நல்லா போன போது அதை இந்தி படங்கள் என்றுதான் சொன்னார்கள். அதே சமயம் தமிழ் தெலுங்கு கன்னட படங்கள் இந்தியாவில் வெளியாகும் போது அந்த படங்களை பான் இந்தியா படங்கள் என்று சொல்கிறார்கள்.

தென்னிந்திய படங்களை மட்டும் தான் அப்படி அழைக்கிறார்கள். ஏன் இப்படி என்று எனக்கு புரியவில்லை. என் படங்களை நான் தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களுக்கான படங்களாக கொடுக்கணும் என்று நினைக்கிறேன். இது என் கருத்து. மத்தவங்க இப்படி சொல்வதை நான் தடுத்து நிறுத்த முடியாது என்று நானி பேசியிருக்கிறார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்