- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சினிமா நடிகன் கிடையாது, எனக்கு வேறு ஒரு அடையாளம் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் -...

நான் சினிமா நடிகன் கிடையாது, எனக்கு வேறு ஒரு அடையாளம் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் – நடிகர் பிரகாஷ்ராஜ் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். குறிப்பாக கில்லி சிங்கம் போக்கிரி வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிப்பில் மிரட்டியவர் பிரகாஷ் ராஜ். அதே நேரத்தில் அபியும் நானும் மொழி போன்ற சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபகாலமாக அரசியல் களத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அதிகமாக காணப்படுகிறார். கர்நாடகாவில் ஒரு தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இடதுசாரி சிந்தனையாளராக உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் மேடைகளிலும் பங்கேற்று பேசி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது, என்னை போராளி போராளின்னு சொல்றீங்க. சிலர் பேர் என்னை அரசியல்வாதியா, நடிகனான்னு கேட்கறாங்க. நடிப்பு என்னுடைய தொழில். போராட்டம் என்னுடைய வாழ்க்கை அது. அதற்கு காரணம் நான் இல்லை.

இன்னிக்கு யாரோ என்கிட்ட பேசும்போது நீங்க ரொம்ப கோபப்படறீங்க என்றார். அட என்னை ஏன் திட்டறீங்க? பெரியாரை திட்டுங்க என்றேன். கோபம் கற்றுக்கொடுத்த அவரு. பாரதி கத்துக்கொடுத்தார். என்னுடைய இலக்கியம் போராளிகள் சேகுவாரா கத்துக்கொடுத்தார்.

- Advertisement -

நெல்சன் மண்டேலா கத்துக்கொடுத்தார். காந்தி கத்துக்கொடுத்தார். அம்பேத்கர் கத்துக்கொடுத்தார். நான் வேறு விதமாக செதுக்கப்பட்டு இருக்கிறேன். நான் சினிமா நடிகன் கிடையாது. சினிமா நடிகன் என்பது பொழுதுபோக்கு எனக்கு ஒரு திரை. எனக்கு திறமை இருக்கு. நான் சம்பாதிக்கிற சின்ன அடையாளம்தான் அது.

ஆனால் எனக்கு தேவையான அடையாளம் இன்னொரு சக மனிதனுக்கு இன்னொரு மனிதனுக்கு ஒரு தொந்தரவு இருக்கும் போதோ ஒரு கஷ்டம் இருக்கும் போதோ கேள்விகள் இருக்கும் போதோ அவனுடன் நிற்பதுதான் என்னுடைய அடையாளம். அதை தான் என் அடையாளமாக பார்க்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்