தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை அமலா. நடிகர்கள் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு என பல நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ரஜினியுடன் கொடி பறக்குது வேலைக்காரன் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் கமலுடன் சத்யா வெற்றிவிழா போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
நடிகை அமலா நடித்த படங்களில் மெல்லத் திறந்தது கதவு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். அதே போல் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக நடிகை அமலா இருந்தார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 1990ம் ஆண்டில் வெளியான படம் புதுப்பாடகன். இந்த படத்தில் ஹீரோவாக விஜயகாந்த் நடித்திருந்தார். நாயகியாக அமலா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ராதாரவி வாகை சந்திரசேகர் ராஜலட்சுமி சின்னி ஜெயந்த் சார்லி ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் தாணு கூறியதாவது, புதுப்பாடகன் படத்தில் நடிப்பதற்காக நடிகை அமலாவுக்கு பேசப்பட்ட சம்பளம் 4 லட்சம் ரூபாய். அதில் 1.60 லட்சம் மட்டும்தான் அவங்க வாங்கினாங்க. மீதி 2.40 லட்சம் ரூபாய் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.
இப்படிப்பட்ட இன்வால்மென்ட் உள்ள டைரக்டரோடு ஒர்க் பண்றது இதுதான் முதல் முறை. இப்ப தான் முதல் முறையாக பார்க்கிறேன். இப்படி ஒரு இன்வால்மென்ட் டெடிகேசன் எல்லாமே பண்றீங்க நீங்க. எனக்கு சம்பளம் வேண்டாம். முதலிலேயே தெரிஞ்சிருந்தா அந்த பணமே வாங்கியிருக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
அந்த மாதிரி எந்த ஒரு நடிகையும் பண்ண மாட்டாங்க. அந்த மகராசி நல்லா இருக்கட்டும். மாதரசி பெற்ற மாணிக்கமாக தான் நான் அமலாவை பார்க்கிறேன். அவங்க எங்க இருந்தாலும் அவங்க குடும்பமும் வம்சமும் நல்லா இருப்பாங்க. அதற்கு பிறகு ஒருமுறை அவங்களை ஏர்ப்போட்டில் பார்த்து பேசியதுதான் என்று தயாரிப்பாளர் தாணு அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





