தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாவர். ஒழுக்கம் நிறைந்தவர் என்பதால் அப்படி அழைக்கப்பட்டார். இவரது மகன்கள் சூர்யா கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர்.
நடிகர் சூர்யாவை நடிகை ஜோதிகாவை காதலித்த திருமணம் செய்துக்கொண்டார். நடிகர் கார்த்தி குடும்ப உறவில் திருமணம் செய்துக்கொண்டார். இப்போது நடிகர் சூர்யா, தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி விட்டதாக தகவல் உள்ளது. நடிகர் கார்த்தி, சென்னையில் தன் குடும்பத்துடன் இருந்து வருகிறார்.
இதுகுறித்த சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மூத்த நடிகர் சிவக்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது நடிகர் சிவக்குமார் கூறியதாவது, கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். சூலூர் அருகில் காசிகவுண்டன்புதுார் என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு காலத்தில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. பாத்ரூம் வசதி இல்லை.
அந்த ஊரில் 11 பேர் ஒரு பள்ளியில் படிக்க ஆரம்பித்தோம். அதில் அனைவரும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். நான் ஒரு ஆள் மட்டும் தான் 1957ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். மெட்ராஸ் வந்து 7 ஆண்டுகள் ஓவியம் படித்தேன். படிக்க வசதி இல்லை. அதன் பிறகு அந்த துறை சரியாக வராது என்று முடிவு செய்து சினிமாவுக்குள் நுழைந்தேன். இது நிரந்தரமில்லாத தொழில் என்று சொல்லி திருமணத்தை தள்ளிப் போட்டேன்.
நான் 38 படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். சினிமாக்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன் என்றார்கள். அதுபோல பருத்திவீரன் படம் பார்த்துவிட்டு வேறு ஒருவராக இருந்தால் கார்த்திக்கு பொண்ணு கொடுத்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ராட்சச வேஷம்.
நானே இருந்தாலும் பொண்ணு கொடுத்து இருக்க மாட்டேன். எந்த நம்பிக்கையில் கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று அந்த விழாவில் நடிகர் சிவகுமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார். நடிகர் கார்த்தி இயக்குனர் அமீர் இயக்கத்தில் முதலில் அறிமுகமான பருத்திவீரன் படத்தில் ஒரு சண்டியர் கேரக்டரில் ரவுடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





