- Advertisement -
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு நேர்காணலில், ரூ. 20 லட்சம் சம்பளம் பேசிவிட்டு ரூ. 1 கோடி சம்பளம் கேட்ட ஒரு இயக்குனர் குறித்தும், 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ரூ. 9 கோடி வட்டியுடன் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளான தயாரிப்பாளர் குறித்தும் பேசியிருந்தார். அவர்கள் யார் என்று திருப்பூர் சுப்ரமணியம் பெயர்களை கூறாத நிலையில், அவர்கள் டைரி என்ற படத்தை இயக்கிய டைரக்டர் இன்னாசி பாண்டியன் என்றும், தயாரிப்பாளர் பைவ் ஸ்டா் கதிரேசன் என்றும் இப்போது முடங்கிய படம் ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





