- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன கொடுமை சார் இது... லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ராகவா லாரன்ஸுடன் இணைய போகிறாராம்... ஆனா...

என்ன கொடுமை சார் இது… லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ராகவா லாரன்ஸுடன் இணைய போகிறாராம்… ஆனா அங்கேயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எதுவென்றால் பேய் சினிமாவும், ராகவா லாரன்ஸும் என்றாகிவிட்டது. பேய்க்கும் பேய்க்கும் சண்டை, ஊரே வேடிக்கை பாக்குது எனக்கூறி அதகளப்படுத்திய ராகவா லாரன்ஸ், ஒரே விதமான பேய் கதையில் நடித்து ரசிகர்களை சலிப்பூட்டி வருகிறார்.

நடன இயக்குனரான அவர், நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த முனி திரைப்படம் லாரன்ஸ்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இதன் பிறகு, பேய் பட ஃபார்முலாக்களை கையில் எடுத்த அவர், அதில் சூப்பர் டூப்பர் வெற்றியையும் கண்டார். ஒரு பங்களா, அதில் பயமுறுத்தும் பேய், தன்னைக் கொன்றவர்களை பழிவாங்க பேய்க்கு உதவும் ஹீரோ என்ற ஒரே செட்டப்தான் அவர் படத்தில் இருக்கும்.

- Advertisement -

ஆனால் அதனை நகைச்சுவையுடன் கலந்து கட்டி ராகவா லாரன்ஸ் கூறும் விதம், ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் காஞ்சனா படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் அடித்தது. இதன் பிறகு அதன் மூன்றாம் பாகத்தை எடுத்து தோல்வி அடைந்த ராகவா லாரன்ஸ், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை எடுத்து ரசிகர்களை கடுப்பூட்டினார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படமும், படுதோல்வி அடைந்தது. இப்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்திருக்கிறார். முதல் படத்தை இயக்கிய பி வாசுவே, இரண்டாம் பாகத்தையும் எடுத்துள்ளார். இந்த படம் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இயக்குனர் ரத்னகுமார் உடன் கைகோர்த்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

- Advertisement -

மேயாத மான் திரைப்படம் மூலம் அறிமுகமான ரத்னகுமார், அமலா பாலுடன் ஆடை, சந்தானத்துடன் குலு குலு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய அவர், லியோ படத்திலும் திரைக்கதை இயக்குனர்களில் ஒருவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் உடன் அவர் இணைந்திருக்கும் திரைப்படமும், ஹாரர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதை திரைக்கதை மற்றும் தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் கவனிக்கிறார். இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் தற்போது தொடங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இறங்கி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்