- Advertisement -
ஒளிப்பதிவாளர் இயக்குனர் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிகர் அர்ஜுன் இணைந்து நடித்த படம் குருதிப்புனல். கடந்த 1995ம் ஆண்டில் அக்டோபர் 23ம் தேதி தீபாவளியன்று இந்த படம் வெளியானது. நேற்றுடன் 31 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த படத்தில் தீவிரவாதி நாசரிடம், வீரம்ன்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது என்ற போலீஸ் அதிகாரி கமல்ஹாசன் பேசிய அந்த வசனம் இப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. நேற்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குருதிப்புனல் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





