- Advertisement -
Homeபொழுதுபோக்குடவுசர் ராமராஜனா? நடனக்குழுவை காலில் விழச் சொன்ன ரசிகர்கள் - கிராமத்து மக்களிடம் வசமாக சிக்கிய...

டவுசர் ராமராஜனா? நடனக்குழுவை காலில் விழச் சொன்ன ரசிகர்கள் – கிராமத்து மக்களிடம் வசமாக சிக்கிய நடிகர் காதல் சுகுமார்!

- Advertisement -

கடந்த 1990களில் ராமராஜன் ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கிராமத்து கலை நிகழ்ச்சிக்கு நடிகர் காதல் சுகுமார் தனது நடனக்குழுவுடன் சென்றிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மகிழ்ச்சியில் அடுத்து அண்ணன் டவுசர் ராமராஜன் பாடல் என தவறாக கூறிவிட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள் டியூப் லைட்டை பிடுங்கி அந்த தொகுப்பாளர் தலையிலேயே ஓங்கி அடித்து கலவரத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

அடிவாங்கிய அந்த நபர் தப்பியோடி விட நடனக்குழுவினர் ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அந்த ரசிகர்கள் ஊரில் இருக்கிற எல்லாருடைய காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் பேமென்ட் தருவோம் என்று கூறியுள்ளனர். வேறு வழியின்றி நடனக்குழுவினர் 15 பேரும் மேடையில் நெடுஞ்சாண்கிடையாக குப்புற படுத்து கும்பிட்டு அந்தப் பணத்தை வாங்கியுள்ளனர். இதை பின்னாளில் நடிகர் ராமராஜனிடம் காதல் சுகுமார் சொன்னபோது ராமராஜன் சிரித்துக்கொண்டே தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

சற்று முன்