- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் வாழ்க்கையும் மொபைல் போன் மாதிரி தான் - துபாயில் நடந்த சீன் பட விழாவில்...

உங்கள் வாழ்க்கையும் மொபைல் போன் மாதிரி தான் – துபாயில் நடந்த சீன் பட விழாவில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா!

- Advertisement -

துபாயில் நேற்று மாலை நடந்த சீன் படம் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் சூர்யா பேசியதாவது, செல்போனில் இன்ஸ்டாகிராமில் நாம பர்டிகுலரா என்ன கண்டென்ட் பார்க்க விரும்பி கேட்கிறோமா, அதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்களாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ நீங்க விரும்பியது தொடர்ந்து போனில் வரும். கார்பெட் வாங்கணுமா, அந்த வீடியோஸ் நிறைய வரும். பைக் வாங்கணும்னா அந்த வீடியோஸ் நிறைய வரும். டிராவல்ஸ் ஏதாவது பண்ணனுமா? அந்த மாதிரி வீடியோஸ் நிறைய வரும். அதுபோல் தான் வாழ்க்கையும். நீங்கள் நல்ல எண்ணங்களில் விருப்பங்களில் இருந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும். எனவே நல்லதை விரும்புங்கள். நல்லதை நினையுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் நல்லதே நடக்கும் என்று நடிகர் சூர்யா பேசியிருக்கிறார்.

சற்று முன்