- Advertisement -
தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படும் அவர் சினிமாவில் நடித்துள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் எல்லம்மா என்கிற படம் வருகிற 2027ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனி எம்எஸ் விஸ்வநாதன் ஹிப் ஹாப் தமிழா ஆதி கங்கை அமரன் போன்றவர்கள் திரைப்படங்களில் நடித்த நிலையில் அந்த வரிசையில் டிஎஸ்பியும் இணைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





