- Advertisement -
துபாயில் நேற்று மாலை நடந்த சீன் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, ஜித்து மாதவன் இயக்கிய ரோமாஞ்சம் ஆவேசம் படங்களை பார்த்த பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பொதுவாக கதைகளை கேட்கும்போது நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தின் கதையை கேட்டபோது என்னால் அப்படி இருக்க முடியவில்லை. கதை கேட்க தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்க தொடங்கி விட்டேன். இந்த படத்தை நான் முழுமையாக ரசித்தேன். சீன் படத்தின் மூலம் ஜித்து மாதவன் முற்றிலும் புதியதொரு உலகத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சூர்யா பேசியிருக்கிறார்.





