- Advertisement -
Homeபொழுதுபோக்குஒவ்வொரு முறையும் நான் வீட்டுக்கு செல்லும் போதும் ரஜினிகாந்த் அப்படி செய்கிறார், இது அவருக்கு அவசியமே...

ஒவ்வொரு முறையும் நான் வீட்டுக்கு செல்லும் போதும் ரஜினிகாந்த் அப்படி செய்கிறார், இது அவருக்கு அவசியமே கிடையாது – திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, நான் இதுவரைக்கும் ரஜினிகாந்த் வீட்டுக்கு 100 தடவைக்கு மேல் போயிருப்பேன். அப்படி நான் போற ஒவ்வொரு முறையும் நான் திருப்பி வெளியே வரும்போதும் வாசல் வரைக்கும் வந்து என்னை அனுப்பி வெச்சிட்டு தான் அவர் உள்ளே போவார். அவர் இப்படி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. இன்னிக்கு அவருக்கு இருக்கிற புகழுக்கும் பெருமைக்கும் இது தேவையில்லை. ஒரு முதலமைச்சர் பெரிய அமைச்சர் என்றால் வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவது மரபு. என்னை மாதிரி ஆளை எல்லாம் அவர் அப்படி வெளியே வந்து அனுப்ப வேண்டும் என்பது அவசியமே கிடையாது. இந்த மாதிரி பண்பை எல்லாம் அவர்கிட்டு இருந்து கத்துக்கிறோம் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

சற்று முன்