- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, திருநங்கைகளை நாம எப்படி வெச்சி இருக்கோம்ன்னா நீங்க வாழ்ந்துட்டு போங்க அப்படின்னு நாம ஏதோ அவங்களுக்கு வாழ்வதற்கான உரிமையை கொடுக்கிற கண்ணோட்டத்தில் தான் அவங்களை பார்த்துட்டு இருக்கோம். அந்த லிப்லாக் கிஸ் சீன் வைத்துதான் டோரதி படமே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த படம் அப்படித்தான் முடியணும். அதுக்கு முன்னாடியே முடிந்திருந்தால் வேறு ஒரு படமாக இருந்திருக்கும். அது ஒரு லிப் லாக் கிஸ் அப்படிங்கறதை தாண்டி மனிதநேயம் அவங்களுக்கான சம உரிமை விஷயமாக தான் நான் பார்க்கிறேன் என்று கார்த்திக் சுப்பராஜ் சர்ச்சையாக பார்க்கப்பட்ட அந்த முத்தக் காட்சி குறித்து விளக்கி கூறியிருக்கிறார்.





