இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் பகத் ஃபாசில் நடித்த படம் ஆவேசம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் என்ற படத்தை ஜித்து மாதவன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியாவும் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜித்து மாதவன் கூறுகையில், சீன் படத்தின் கதையை முதலில் பகத் ஃபாசிலிடம்தான் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கதையின் போக்கை கருத்தில் கொண்டு இந்த கதை சூர்யாவுக்கு ஏற்ப மாற்றப்பட்டது. இதுகுறித்து பகத் ஃபாசிலிடம் சொன்னபோது அவரும் அதை ஆமோதித்தார். அதன்பிறகு நடிகர் சூர்யாவை சந்தித்து கதை சொன்னேன். சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்து போனதால் உடனடியாக அவர் படத்தில் கமிட் ஆனார் என்றும் இயக்குனர் ஜிக்கு மாதவன் கூறியிருக்கிறார்.





