- Advertisement -
அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. பல படங்களில் நடித்த அவரை நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் காணவில்லை. இப்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மீண்டும் அட்டக்கத்தி நந்திதா நடிக்க வந்துள்ளார். இது குறித்து நடிகை நந்திதா கூறுகையில், ரத்தம் ரணம் படங்களுக்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன். எல்லாமே ஒரே மாதிரியான ரோல்களாக இருந்ததால் நடிக்கவில்லை. போலீஸ் கேரக்டரில் நடித்தால் வரிசையாக போலீஸ் கேரக்டரிலேயே நடிக்க கேட்கிறாங்க. ஒரு பாட்டுக்கு ஆடினால் அதே மாதிரி கேட்டு வாய்ப்புகள் வருது. இதையெல்லாம் தவிர்ப்பதால் தான் படங்கள் இல்லாமல் இத்தனை நாட்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது என்று நந்திதா கூறியிருக்கிறார்.





