- Advertisement -
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சிஜி பணிகள் குறித்து யூடியூப்பில் எதிர்மறை விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 400 கலைஞர்கள் இரவு பகலாக இந்த படத்துக்காக சிஜி தொழில்நுட்ப பணிகளுக்காக உழைத்து உள்ளனர். 3000க்கும் மேற்பட்ட சிஜி காட்சிகளில் வெறும் 15 மட்டுமே ஏஐ காட்சிகளாக இருக்கும். பிடித்திருந்தால் படத்தை பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று இயக்குனர் சுந்தர் சி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





