- Advertisement -
ஒருமுறை விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, ஒருமுறை நம்பியார் சாமியிடம் பேசிக்கொண்டு இருந்த போது ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் ஒண்ணுமே பண்ண வேண்டாம் என்றார். ஒண்ணுமே பண்ண வேண்டாமா? என்று ஆச்சரியமாக கேட்டேன். ஆமாம். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாலே போதும். அதுவே நாளடைவில் ஆரோக்கியம் தந்துவிடும் என்றார். இது ரொம்ப பெரிய வார்த்தை. அதே மாதிரி நல்லவனாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாலே போதும். நம் செய்கைகள் நல்லதாக மாறிவிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.





