- Advertisement -
நடிகர் சூர்யாவின் 49வது படத்தை மண்டாடி படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மதிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக வேறொரு திரைப்படத்தில் நடித்து முடிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு புதிய படத்தில் சூர்யா இணைய உள்ளதாகவும் சூர்யா 49 படம் கடலோர பின்னணியில் உருவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.





