- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது போலியாகவே தெரியாது, அதை பார்த்தால் என் நண்பர்கள் குடும்பத்தினர் கூட நான்தான் என்று உறுதியாக...

அது போலியாகவே தெரியாது, அதை பார்த்தால் என் நண்பர்கள் குடும்பத்தினர் கூட நான்தான் என்று உறுதியாக நம்புவார்கள் – நடிகை ரித்திகா சிங் வேதனை!

- Advertisement -

இறுதிச்சுற்று ஆண்டவன் கட்டளை வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்திகா சிங். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இன்ஸ்டாகிராமில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே எனக்கு உள்ளது. இதில் அனைத்து விஷயங்களையும் நேரடியாக நானே பகிர்கிறேன். ஆனால் பேஸ்புக்கில் எனது பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டு மாதம் 400 ரூபாய் கட்டணத்தில் சப்ஸ்கிரைப் செய்து அதை சிலர் நடத்தி வருகின்றனர். நான் என நம்பி பலரும் அதற்காக பணம் செலுத்துகின்றனர். அது என்னை அவமதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. தவறான என்னை சித்தரித்து போலியான ஏஐ வீடியோக்கள் அதில் பரப்பப்பட்டு வருகின்றன. எனது நற்பெயரை குலைக்கும் வகையிலான வீடியோக்கள் அதில் உருவாக்கப்படுகின்றன. எனது குடும்பத்தினரோ அல்லது நண்பர்களாக பார்த்தால் கூட அது நான் அல்ல என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. தயவு செய்து அதை நம்ப வேண்டாம். சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம் என்று நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கிறார்.

சற்று முன்