- Advertisement -
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா பேசியதாவது, வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை அழகானது. நாம் மூச்சு விடும் வரை எல்லா விஷயங்களும் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை தான். எதை வேண்டுமானாலும் மாறலாம். எவற்றை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம். மூச்சு விடும் வரை தோல்வி என்பது இல்லை. எதுவும் முடிவு இல்லை. எதுவும் பிரிவில்லை. எதுவும் உடைந்து போகவில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய இயலும் என்று நடிகர் சூர்யா தன்னம்பிக்கை தரும் விதமாக பேசியிருக்கிறார்.





