- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கும் இரட்டை ஹீரோ படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பாரா? - அன்றே அப்படி சொன்ன...

மணிரத்னம் இயக்கும் இரட்டை ஹீரோ படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பாரா? – அன்றே அப்படி சொன்ன தனுஷ், இதுதான் உண்மை நிலவரம்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இஞ்சி வெல்லம் படத்துக்கு பிறகு இரட்டை ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் நடிகர்கள் சூர்யா தனுஷ் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், தனுஷூக்கு ஏற்கனவே லைன் அப்பில் நிறைய படங்கள் உள்ளது. அரசியலிலும் அவரது கவனம் உள்ளது. மேலும் மணிரத்னம் ஷங்கர் போன்ற ஜாம்பவான்களை தூரத்தில் இருந்து பார்த்து அவர்களது திறமையை போற்ற வேண்டும். அவர்களது படங்களில் நடித்தால் அந்த ஜாம்பவான் பிம்பம் மாறிவிடும். அதனால் அவர்களது படங்களில் நடிப்பதை தவிர்ப்பேன் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். அதனால் தனுஷ் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்வருவது சந்தேகம்தான் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்