- Advertisement -
இனி தமிழில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 2:30 மணி வரை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் உள்ளூர் பண்டிகை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு கிழமைகளிலும் 6 காட்சிகள் திரையிடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய படங்கள் வெளியானால் ஒரு வாரத்திற்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதித்திருந்த நிலையில் இப்போது தினமும் 6 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.





