சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பாடகர் கிரிஷ் கூறியதாவது, படத்தில் பாட நிறைய பேர் கிட்ட வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கலே. அமெரிக்காவுல கணேஷ்குமார்ன்னு ஒரு நண்பர் அறிமுகமானார். அவர் ஒரு கம்போஸர். அவருக்கு என்னோட வாய்ஸ் பிடித்து போய் அவரோட ஆல்பத்துல பாடினேன். சினிமாவுல பாட நான் 10 வருஷமா ட்ரை பண்றேன்னு சொல்லி எங்க ஊருக்கு வர்றீங்களா? ஒருவாட்டி வந்து எங்க சாமியை பாருங்க. நல்ல மாற்றங்கள் வரும்ன்னு சொன்னார. நானும் வரேன்னு சொல்லிட்டேன். அமெரிக்காவில் இருந்து வந்த 2வது நாள் திருவண்ணாமலைக்கு பஸ்சுல போறேன். பஸ்ல இருந்து கீழே இறங்கி திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைக்கிறேன். போன் வருது. எடுத்து பேசினேன். நான் கணேஷ்குமார் பேசறேன். ஹாரிஸ் ஜெயராஜ் சாருக்கு உங்க வாய்ஸ் ரொம்ப பிடிச்சு போச்சு. 2 நாள்ல ரெக்கார்டிங் கூப்பிடுவாங்க. ரெடியா இருங்கன்னு சொன்னார். அப்போ அண்ணாமலையாரை தலையை தூக்கி பார்த்தேன். அன்று முதல் என்னோட ஸ்தலம் அதுதான் என்று பாடகிர் கிரிஷ் கூறியிருக்கிறார்.





