- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, இன்றைய சமூக வலைதளங்களில் 90 சதவீதம் எதிர்மறையான கருத்துக்கள் நிறைந்துள்ளன. முன்பு தேநீர் கடைகளில் நண்பர்கள் சந்திக்கும்போது 15 நிமிடங்கள் பேசிவிட்டு தங்கள் வேலைகளுக்கு சென்று விடுவார்கள். ஆனால் தற்போது அதே விவாதங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்மறை எண்ணங்களை பரப்புகின்றனர். நல்ல விஷயங்கள் இருந்தாலும் எதிர்மறையான கருத்துக்களே அதிகம் காணப்படுகின்றன என்று இயக்குனர் மிஸ்கின் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





