- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கேட்ட கேள்வி - மண் தரையில் படுத்துக்கொண்டே பதில் சொன்ன நடிகர்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கேட்ட கேள்வி – மண் தரையில் படுத்துக்கொண்டே பதில் சொன்ன நடிகர் பகவதி பெருமாள்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பகவதி பெருமாள் கூறியதாவது, ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் மண் தரையில் கீழே படுத்து இருப்பேன். அப்போது என்னை கடப்பாரையால் ரஜினி தாக்குவது போன்ற காட்சி இருக்கும். அப்போது ரஜினி சார் உங்க பெயர் என்ன என்று கேட்டார். நான் பக்ஸ் என்று சொன்னேன். பக்ஸா? என்று ஆச்சரியமாக கேட்டார். முழுப்பெயர் பகவதி பெருமாள். பிரண்ட்ஸ் எல்லாம் பக்ஸ் என்று அழைப்பார்கள் என்றேன். அப்போது அவர் வாய்க்குள் பகவதி பெருமாள் பகவதி பெருமாள் என்று சொல்லி பார்த்துக்கொண்டார். மண் தரையில் கீழே படுத்திருந்த அந்த நேரத்திலும் தலைவர் என் பெயரை பகவதி பெருமாள் பகவதி பெருமாள் என்று சொல்வதை பார்த்து, தலைவர் நம்ம பேரை சொல்லி சொல்லி பார்க்கிறார். அடப்போடா இதுக்கு மேல வேற என்ன வேணும் என்று சந்தோஷமாகி விட்டேன் என்று நடிகர் பகவதி பெருமாள் கூறியிருக்கிறார்.

சற்று முன்