- Advertisement -
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போலீஸ் அதிகாரியாக நடித்த படம் என் கடமை. இந்த படத்தில் சரோஜாதேவி எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். குடும்ப பாசம் துப்பறியும் கதை என்று கமர்ஷியல் கலந்த இந்த படத்தில் எம்ஜிஆர் சண்டை காதல் காமெடி பாட்டு என ரசிகர்கள் கவரும் விதமாக எல்லாமே இந்த படத்தில் இருந்தது. ஆனாலும் இந்த படம் சரியாக ஓடவில்லை. அதற்கு காரணம் அரசியல்தான். எம்ஜிஆர் அப்போது கட்சியை விட்டு விலகினதால் அந்த கட்சிக்காரர்கள் மக்களை தியேட்டருக்கு போக விடாமல் தடுத்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் ரசிகர்களை மீட்க இன்னும் கடுமையாக உழைப்பேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.





