- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனரை என்னடா என்று கேட்ட பழம்பெரும் நடிகை - படப்பிடிப்பு தளத்தில் நடந்த தரமான சம்பவம்,...

இயக்குனரை என்னடா என்று கேட்ட பழம்பெரும் நடிகை – படப்பிடிப்பு தளத்தில் நடந்த தரமான சம்பவம், இவர் புரட்சித் தலைவரையே ராமச்சந்திரன் என்று அழைப்பாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை பானுமதி கோபக்காரர் என்று பெயர் பெற்றவர். ஜாம்பவான் நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கூட அவரை மரியாதையுடன் அம்மா என்றுதான் அழைத்துள்ளனர். சின்னவர் என்று பலரும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எம்ஜிஆரை ராமச்சந்திரன் என்று நேரடியாக அழைத்தவர் பானுமதி. ஒரு படப்பிடிப்பில் நடிகைகளை வாடி போடி என அழைக்கும் பழக்கம் கொண்ட ஒரு இயக்குனர் பானுமதியை பார்த்து என்னடி என்று கேட்டிருக்கிறார். உடனே பானுமதியும் பதிலுக்கு அவரை என்னடா என்று திருப்பி கேட்டதால் படப்பிடிப்பு தளமே அதிர்ச்சி அடைந்துள்ளது. நடிகைகளுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி பதில் அளித்ததாக பானுமதி அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்