- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, இந்தியை பொறுத்த வரை நமக்கு அதன் மீது வெறுப்பு கிடையாது. அதை சொன்னால் புரியவே மாட்டீங்குது. இந்தி மட்டுமல்ல எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு கிடையாது. அப்படி இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோஷமாக நாம் தேசிய கீதத்தை வங்க மொழியில் பாடுவோமா? தப்பாக பாடினாலும் சந்தோஷமாக தைரியமாக பெருமையாக பாடுவோம். ஏன்னா இது என் தேசிய கீதம் என்று. புரியாமல் கூட சில நல்ல விஷயங்களை செய்வோம் நாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.





