- Advertisement -
தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் மோகன் போன்ற நட்சத்திர ஹீரோக்கள் வரிசையில் இருந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. கடந்த 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமானார். இன்றுடன் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





