இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் இப்போது டாப் டைரக்டர்களில் ஒருவராக இருக்கிறார். துவக்கத்தில் மாநகரம் என்ற படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அடுத்து, கைதி படம் மூலம், முன்னணி இயக்குநராக முன்னேறினார்.
3வது படத்திலேயே உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், விக்ரம் படத்தை இயக்கினார். இது பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்து, கமலுக்கு கம்பேக் கொடுத்தது. விக்ரம் வசூலில் பணமழை கொட்டியதால், கமல் சந்தோஷத்தின் உச்சத்துக்கு போய், லோகேஷ் கனகராஜூக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இதற்கு முந்தைய விஜய் படங்களான பீஸ்ட், வாரிசு சொதப்பியதால், இந்த படத்தை விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நிச்சயம் விஜய்க்கு ஒரு மறக்க முடியாத வெற்றியாக இந்த படத்தை தருவார் என நம்பியுள்ளனர்.
இதற்கிடையே, ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதுவும் இன்டஸ்ட்ரியில் முக்கிய டாக் ஆக மாறி இருக்கிறது. முதலில் கார்த்தி, அடுத்து கமல், இப்போது விஜய், அடுத்து ரஜினி என ஸ்டார் நடிகர்களின் இயக்குநராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், இவரிடம் கதைகேட்டு விட்டு நடிக்கவில்லை என மறுத்திருக்கிறார் இந்த பிரபல நடிகர் என்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த நடிகர் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவிதான். இயக்குநர் அகமது இயக்கத்தில், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம், ரிலீஸாக உள்ள நிலையில், இறைவன் படம் குறித்து பேச நேர்காணல் ஒன்றில், அந்த படத்தின் இயக்குநர் அகமது உடன் ஜெயம் ரவி பங்கேற்றார்.
ஜெயம் ரவி கூறுகையில், எனக்கு லோகேஷ் கனகராஜ் கதை சொன்னது உண்மைதான். ஆனால், அது இப்போது அல்ல. முன்னாடி நடந்தது. அப்போதைய சந்தர்ப்ப சூழலில், அந்த படம் என்னால் அவருடன் பண்ண முடியவில்லை. ஆனால், அவர் மிகச்சிறந்த இயக்குநர். வாய்ப்பு அமைந்தால், இனி வருங்காலத்தில், அவருடன் படம் பண்ணுவேன். அவருக்கு சிறப்பாக எதிர்காலம் உள்ளது, அது இப்போது துவங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.





