விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் சஞ்சய் போக்கிரி, வேலாயுதம் ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனம் ஆடினார். சாஷா தெறி படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருந்தார். சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய் தனது தந்தை போலவே நடிகராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவர் தனது தாத்தா போல் இயக்குநராகும் ஆசையை வளர்த்துக்கொண்டார். அதற்காக கனடா மற்றும் லண்டனில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்தார். மேலும் படித்துக்கொண்டிருந்தபோது குறும்படம் ஒன்றையும் இயக்கினார். அந்தக் குறும்படத்தை ரசிகர்கள் வரவேற்றனர். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.
லைகா நிறுவனம் அந்த நிறுவனத்தை அந்தப் படத்தை தயாரிக்கிறது. அதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. விஜய் சேதுபதி நடிப்பார் என்று முதலில் தகவல் வெளியான சூழலில் அவர் இல்லை ஜீவாதான் நடிப்பார் என்று கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி இரண்டு பேருமே இல்லை நடிகர் கவின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பார் என தற்போது கூறப்படுகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதாவின் தந்தையும் லைகா நிறுவனர் சுபாஸ்கரனும் ஒரே ஊரை சேர்ந்தவர். மேலும் சங்கீதாவின் தந்தை லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார் என்றும் அவருக்கும் சுபாஸ்கரனுக்கும் ஏற்கனவே பழக்கம். அந்தப் பழக்கத்தை வைத்து மூவ் செய்து தனது பேரனை லைகா பேனரில் இயக்குநராக களம் இறக்கியிருக்கிறார் என்று தகவல் கசிந்திருக்கிறது.
இதற்கிடையே ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நெபோடிஸம் கலாசாரம் வளர்ந்திருப்பதாக ஒருசிலர் விமர்சித்தனர். ஆனால் விஜய் ரசிகர்கள் ஏன் கமல், ரஜினி, விக்ரம் குடும்பத்திலிருந்து யாருமே சினிமாவுக்கு வரவில்லையா என கேள்வி கேட்டு விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு இசையமைக்க முதலில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் அவரோ படு பிஸியாக இருப்பதால் தன்னால் முடியாது என்று மறுத்திவிட்டாராம். அனிருத் விலகியதை அடுத்து யுவன் ஷங்கர் ராஜா அந்தப் படத்துக்கு இசையமைக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு முழு காரணம் தளபதி 68ல் யுவன் இசையமைப்பதுதான் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.





