தமிழ் சினிமாவில் சமீபத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட வெற்றிப் படங்கள் பலரும் சத்தமின்றி வெளிவந்து ஜெயித்தவை தான். காக்கா முட்டை குட்நைட் பார்க்கிங் லப்பர் பந்து சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி என இந்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை. பிரமோ நிகழ்ச்சிகள் ஊர் ஊராக நடத்தப்படவில்லை.
ஒரு நல்ல படம் அதற்கான வெற்றியை தானாகவே தேடிக்கொள்ளும் என்பதை போல இந்த படங்களை பார்த்து ரசிகர்கள் தான் அந்த படங்களை, மிக நல்ல படம், பார்க்க வேண்டிய படம் என்று மற்றவர்களிடம் சொல்லி விளம்பரம் செய்தார்கள். அப்படிதான் அந்த படங்களை காண ரசிகர்கள் குவிந்தனர்.
ஆனால் மொக்கை படமாக ரசிகர்களை வெறுப்பேற்றிய தக்லைஃப் படத்துக்காக கமல்ஹாசன் சிம்பு திரிஷா மணிரத்னம் என மும்பை ஐதராபாத் டெல்லி பெங்களூரு என ஊர் ஊராக விமானத்தில் பறந்து போய் பிரமோ செய்தார்கள். ஆனால் படம் பார்த்த ரசிகர்கள், ஆள விடுங்கடா சாமி என கதறிக்கொண்டு தியேட்டர்களை விட்டு ஓடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது தக்லைஃப் படம் குறித்த ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது, எழுத்தாளர் என் கணேசன் என்பவர் எழுதிய அமானுஷ்யன் என்ற நாவலை காப்பியடித்து பல காட்சிகள் தக்லைஃப் படத்தில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைவேளைக்கு முன்பும், இடைவேளைக்கு பிறகும் வரும் பல காட்சிகள் இந்த நாவலில் இருந்து சுட்டதுதான் என்று உறுதியாகி உள்ளது.
தக்லைஃப் படத்தின் கதை திரைக்கதையை படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்து தான் எழுதியிருக்கின்றனர். இதில் அமானுஷ்யன் நாவலில் வரும் பல அத்தியாயங்களை அப்படியே படத்தில் காட்சிகளாக இருவரும் வைத்திருக்கின்றனர். அந்த நாவலில் இருக்கும் வசனங்கள் குறைக்கப்பட்டு படத்தில் அதை விஷூவலாக காட்டியுள்ளனர்.
அதனால் இந்த படம் அமானுஷ்யன் என்ற நாவலில் இருந்து பல விஷயங்களை எடுத்து காப்பியடித்து உருவாக்கப்பட்ட படம் என்பது உறுதியாகி விட்டது. இன்னும் சில தினங்களில் இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் காப்பியடித்து கூட ஒரு படத்தை வெற்றிகரமாக கமல்ஹாசன் மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களால் தர முடியவில்லை. இப்படி ஃபெயில் ஆயிட்டாங்களே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





