- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்ன படம், பெரிய படத்துக்கு என தனித்தனியாக தியேட்டர் இருக்கா - நேர்காணலில் சூப்பர் கேள்வி...

சின்ன படம், பெரிய படத்துக்கு என தனித்தனியாக தியேட்டர் இருக்கா – நேர்காணலில் சூப்பர் கேள்வி கேட்ட பிரபல நடிகர்

- Advertisement -

தமிழ் சினிமாவில், இப்போது சின்ன பட்ஜெட்டில் 3 கோடி, 4 கோடி ரூபாய் படம் எடுக்க நினைப்பவர்கள், வந்து விடாதீர்கள் என விஷால் கூறியிருந்தது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் போஸ் வெங்கட், குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நடிகர். சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில், மெட்டி ஒலி என்ற சீரியலில் போஸ் கேரக்டர் மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனால், வெங்கட் என்ற தனது பெயருடன், அவரது போஸ் என்ற கேரக்டரும் அடையாளமாகி விட்டது.

ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில், வில்லன் சுமனுடன் அவரது உதவியாளராக போஸ் வெங்கட் நடித்திருப்பார். இதில் தனியா வந்து மாட்டிக்கிட்டயேடா என கேட்கும் போஸ் வெங்கட்டிடம், கண்ணா, சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று ரஜினி டயலாக் பேசியது, செம டிரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் போஸ் வெங்கட் நடிப்பு, கவண் படத்தில் சிறப்பாக இருந்தது. மோசமான அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருப்பார். போஸ்வெங்கட், தமிழ் சினிமா குறித்து, ஆணித்தரமான கருத்துகளை சொல்லி வருபவர். அதுபோல் விஷால் கருத்துக்கும் அவர், சமீபத்திய நேர்காணலில் பதில் கூறியுள்ளார்.

படங்களில் சின்ன படம், பெரிய படம் என்றே கிடையாது. அது திரைப்படம் அவ்வளவுதான். சின்ன படங்கள், பெரிய படங்களுக்கு என தனித்தனியாக தியேட்டர்கள் இல்லை. ஒரே காம்ப்ளக்ஸ்தான். ஒரே தியேட்டர்தான். கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் சினிமாவை மாற்றி அமைத்ததே சிறிய படங்கள்தான். கடந்தாண்டு வெற்றிக்கரமாக ஓடிய டாடா, குட்நைட், அயோத்தி படங்கள் எல்லாம் சின்ன படங்கள்தான்.
.
மண்டேலா படம் எடுத்தவர்தான், மாவீரன் படம் எடுத்தார். நெல்சன், லியோ கனகராஜ் போன்றவர்கள் கூட சின்ன படம் எடுத்துதான் இப்போது பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருகின்றனர். சேது என்ற சின்ன படத்தில்தான் விக்ரம் நடித்தார். காதல் கொண்டேன் என்ற சின்ன படத்தில் நடித்தவர்தான் தனுஷ். கமல், ரஜினியே, 16 வயதினிலே என்ற சின்ன படங்களில் நடித்தவர்கள்தான். சின்னதாக ஆரம்பித்தால் தான் அது பெரிதாக வளரும். சின்னதாக ஆரம்பித்துதான், அது பெரியதாக முடியும், என்று தௌிவுபடுத்தி இருக்கிறார் போஸ் வெங்கட். இவரது பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்