- Advertisement -
Homeபொழுதுபோக்குமெல்ல மெல்ல அதிகரிக்கும் திரையரங்கு காட்சிகள்... சந்திரமுகி 2-ஐ ஓரங்கட்டி வசூலில் நின்று பேசிய சித்தா......

மெல்ல மெல்ல அதிகரிக்கும் திரையரங்கு காட்சிகள்… சந்திரமுகி 2-ஐ ஓரங்கட்டி வசூலில் நின்று பேசிய சித்தா… எத்தனை கோடி ரூபாய் வசூல் தெரியுமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டத்தக்க வெற்றிகளை கொடுத்து திரையுலகில் தனக்கான இருப்பை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் சித்தார்த். ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த அவர், ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்திலும் சூர்யா, மாதவன் ஆகியோருடன் நடித்தார்.

அங்கிருந்து தெலுங்கு திரைப்பட உலகிற்கு சென்ற சித்தார்த், அங்கு சில வெற்றி படங்களை கொடுத்தார். பிறகு மீண்டும் தமிழ் பக்கம் திரும்பி அவர் 180 திரைப்படத்தில் நடிக்க, அங்கிருந்து தனது கோலிவுட் படத்திற்கான கவுண்ட்டை தொடங்கினார்.

காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன் என அடுத்தடுத்து சித்தார்த் படங்கள் வெளிவரத் தொடங்கின. இதில் ஜிகர்தண்டா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்று கூறலாம். படத்தில் பாபி சிம்ஹாவுக்கு சமமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள் சித்தார்த் நடிப்பில் வெளியாகின. இந்த நிலையில், அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் சித்தா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் திரைப்படங்களை இயக்கிய அருண்குமாரின் நான்காவது திரைப்படம் இது.

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்ற சித்தார்த்தை, காவிரி பிரச்சனையை காரணம் காட்டி கன்னட அமைப்புகள் கண்டன கோஷம் விட்டன. இதனால் நிகழ்ச்சியின் பாதையில் இருந்து வெளியேறினார் சித்தார்த். இதற்கு பிரகாஷ்ராஜ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமையையும், அது குறித்த சமூக பார்வையையும் இந்த திரைப்படம் விளக்கியுள்ளது. சந்திரமுகி 2 மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்களுடன் இது வெளியானதால் ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளை கிடைத்தது. பிறகு படத்தின் விமர்சனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆக, திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்கள் சித்தாவுக்கு செல்ல, அதன் வசூலும் திருப்திகரமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நான்கு நாட்களில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்