- Advertisement -
Homeபொழுதுபோக்குஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா நடிக்கும் கங்குவா, எந்த நாட்டில் கிளைமேக்ஸ் எடுக்கறாங்க தெரியுமா -...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா நடிக்கும் கங்குவா, எந்த நாட்டில் கிளைமேக்ஸ் எடுக்கறாங்க தெரியுமா – அலப்பரை கௌப்பறாங்கப்பா

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூர்யா, முன்னணி ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தில் நடித்த போது, எட்டாம் வகுப்பு மாணவன் போல, காட்சியளித்த சூர்யாவை பார்த்த பலரும், இவர் ஹீரோவாக நடித்தால் பார்க்க முடியுமா என்றுதான் விமர்சித்தனர். ஆனால், அந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்து நொறுக்கி, நந்தா படத்தில் அட்டகாசமாக நடித்து ஹீரோ ஆனார் சூர்யா.

பாலா, சியான் விக்ரமை அடையாளப்படுத்தியது போலவே, சூர்யாவுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். தொடர்ந்து காக்க, காக்க படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. பிதாமகன், மாயாவி, அயன், சிங்கம், ஏழாம் அறிவு, வேல், சில்லுன்னு ஒரு காதல் போன்ற தொடர் வெற்றி படங்களால் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவரானார். நடிகர் சிவக்குமாரின் மற்றொரு மகன் கார்த்தியும், அண்ணன் சூர்யாவை போலவே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

சூர்யா படங்கள் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றாலும் சில படங்கள் தோல்வியடைவதும் அடிக்கடி நடக்கிறது. எதற்கும் துணிந்தவன், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், சூர்யாவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன. சிங்கம் 3 படம் கூட, ரசிகர்களிடம் சுமாரான பாராட்டையே பெற்றன. சிங்கம் முதல் படம் போல, சிங்கம் 3 அவ்வளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா, அண்ணாத்த படத்துக்கு பிறகு இயக்கும் கங்குவா என்ற புதிய படத்தில், தற்போது சூர்யா நடித்து வருகிறார். கங்குவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா படானி நடித்து வருகிறார். வில்லனாக, நடிகர் நட்டி என்கிற நடராஜன் (ஒளிப்பதிவாளர்) நடிக்கிறார். சதுரங்கவேட்டை படத்தில் ஏமாற்று பேர்வழியாக, நம்ம வீட்டு மாப்பிள்ளை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக நடித்தவர் தான் நட்டி.

கங்குவா படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஹைதராபாத், மும்பை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தாய்லாந்து நாட்டில் நடக்கிறது. தாய்லாந்து நாட்டின் மிக முக்கிய இடங்களில் சண்டை காட்சிகள், படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ, சூர்யாவின் பிறந்த நாளான, கடந்த ஜூலை 23 அன்று வெளியிடப்பட்டது. இந்த டீசர் 3.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கங்குவா படத்தில் வித்யாசமான கெட்டப்களில் சூர்யாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தரமான சம்பங்கள் நிறைந்த படமாக கங்குவா உருவாகி வருவது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் இப்போதே அலப்பரையை கௌப்பி வருகிறது.

சற்று முன்